தி.மு.க.வை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டால் மட்டுமே மற்ற அரசியல் கட்சிகள் தமிழகத்தில் வளர முடியும் என்று அண்மையில் முன்னாள் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
அவர் பேசும்போது, திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்த வேண்டும் என்று நினைப்பவர்கள், அவர்களே வீழ்ந்து போவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் புதிய அரசியல் பிரவேசம் குறித்து யோசிப்பவர்களுக்கு அவர் மறைமுக எச்சரிக்கை விடுத்திருப்பதாகவும் அரசியல் பார்வையாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
மேலும் பேசிய அமைச்சர், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க. 2026-ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று உறுதியாகக் கூறினார். தி.மு.க.வானது தற்போது 72-வது ஆண்டைத் தொட்டுள்ள ஓர் உறுதியான இயக்கம் என்றும், அதனை யாராலும் அசைக்க முடியாது என்றும் அவர் ஆணித்தரமாகத் தெரிவித்தார்.

0 Comments