மகளின் திருமணத்திற்கு உதவிய விஜய் சேதுபதி: அனுராக் காஷ்யப்

NARADAR VISIT
0


திரைையுலகில் "மக்கள் செல்வன்" என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதியின் மனிதாபிமான செயல்கள் குறித்து பல செய்திகள் அவ்வப்போது வெளிவருவது வழக்கம். இந்நிலையில், பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப், விஜய் சேதுபதி தனக்கு செய்த ஒரு பெரிய உதவி குறித்து உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அனுராக் காஷ்யப் கூறுகையில், "எனது மகளின் திருமண செலவுகளுக்குக் கூட என்னிடம் போதிய பணம் இல்லாத ஒரு சூழல் இருந்தது. ஒருமுறை எதேச்சையாக நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்தபோது, இந்த கஷ்டத்தை அவரிடம் பகிர்ந்து கொண்டேன்.


இதைக் கேட்டவுடன், அவர் உடனடியாக எனக்கு 'மகாராஜா' திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கினார். இதன் மூலம் கிடைத்த வருமானம், எனது மகளின் திருமணத்தை எந்தவித மனக்கவலையும் இன்றி நிம்மதியாகவும், சிறப்பாகவும் நடத்தி முடிக்க பெரும் உதவியாக இருந்தது," என்று தெரிவித்துள்ளார்.


இவ்வாறு விஜய் சேதுபதி செய்த பேருதவியால் தனது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்ததாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், திரையுலகில் சக கலைஞர்களுக்கு உதவும் விஜய் சேதுபதியின் குணம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default