நடிகரும் ரேஸருமான அஜித்த்குமாரின் கார் ரேசிங் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட “Racing Isn’t Acting” எனும் ஆவணப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
இந்த ஆவணப்படத்தை இயக்கியுள்ள எல். விஜய், “அஜித் அவர்களின் கார் ரேசிங் அனுபவங்களை பதிவு செய்யும் இந்த ஆவணப்படம், ரசிகர்களுக்கு விருப்பமானதாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
அஜித்தின் ரேசிங் ஆர்வம், அவரது தனிப்பட்ட முயற்சிகள், சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற அனுபவங்கள் உள்ளிட்டவை இந்த ஆவணப்படத்தில் இடம்பெறவுள்ளன.

